நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ரெயில் நிலையத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ரெயில் நிலையத்தில் புகுந்த கரடி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பழைய அருவங்காடு ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்குள் சமீபத்தில் கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி, அங்கிருந்த பயணிகளையும் பொதுமக்களையும் தாக்குவது போல ஆக்ரோஷமாக பாய்ந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பொதுமக்கள் கோரிக்கை எனினும், அதிர்ஷ்டவசமாக கரடி யாரையும் தாக்காமல், அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் ஓடி மறைந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. அதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் பொதுமக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/bear-enters-coonoor-railway-station-public-flee-in-panic




