வாஷிங்டன், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், சாலைப் பயணத்தைத் தவிர்ப்பதற்காக 69 வயது முதியவர் ஒருவர் தன் சொந்த ஹெலிகாப்டரில் ஷாப்பிங் செய்ய வந்த விசித்திரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கிங் மைதானத்தில் தரையிறக்கம் அமெரிக்கா, விஸ்கான்சின் மாகாணத்தின் ரோன்ஸ்டேல் பகுதியைச் சேர்ந்த முதியவர் லெராய் கான்ஸ் (வயது 69). இவர் ரிட்ச்பீல்ட் பகுதியில் உள்ள பிரபல விளையாட்டு மற்றும் வெளிப்புற உபகரணங்கள் விற்பனை நிலையமான கபெலாஸ் கடைக்குச் செல்ல திட்டமிட்டார். காரில் சென்றால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்பதால், அவர் தனது சொந்த ஹெலிகாப்டரை எடுத்துக்கொண்டு நேரடியாகக் கடையின் பார்க்கிங் மைதானத்திலேயே அதனைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். அதிகாரிகள் விசாரணை பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் தரையிறங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வாஷிங்டன் கவுண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் முறையான விமான ஓட்டுநர் உரிமம் வைத்திருந்ததும், அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் உறுதி செய்யப்பட்டது. விதிமீறல்கள் எதுவும் இல்லாததால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. கார் பயணத்தைத் தவிர்க்க ஹெலிகாப்டரில் ஷாப்பிங் வந்த முதியவரின் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/usa-grandpa-takes-a-helicopter-to-go-shopping




