சென்னை, சென்னை பாடி, பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவர் சம்பவத்தன்று மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது குதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவரது உடலில் தீக்காயங்களும், தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. பின்னர் அவர் கீழே விழுந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சீவ் உயிரிழந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-jumps-from-2nd-floor-onto-transformer-dies




