தனுஷின் 56வது திரைப்படம் 2027 கோடை வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் தனுஷின் புதிய படமான ‘டி56’ படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்றது. மாரநாடு கருப்பணசாமி கோவிலில் பூஜை ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘டி56’ படத்தை இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரடொக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவிலில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி காலை படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, எஸ்.ஜே.சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார். ரசிகர்கள் உற்சாக வரவேற்பு ‘டி56’ படத்தின் பூஜை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். ஒரு மாநாடு போன்று ரசிகர்கள் குவிந்து தனுஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைக் கண்ட நடிகர் வடிவேலு, “காரில் வரும்போதே எண்ண முடியாத அளவிற்கான கார்களை பார்த்தேன். திரைப்படத்தின் பூஜையே மாநாடு போல் இருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. மிரண்டுவிட்டேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை” எனத் தெரிவித்தார். திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் இந்த நிலையில், தனுஷின் 56வது படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் 2027 கோடை வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dhanushs-56th-movie-release-update



