பெங்களூரு, கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட் பட்ட பகுதியில் மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் அந்த மாணவி தனது விடுதியின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுதிப் (வயது 27) என்ற வாலிபர் மாணவிக்கு நடுரோட்டில் வைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம்போட்டு அலறியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சேத்தன் (25), ரோகன் (25) ஆகிய 2 வாலிபர்கள் சுதிப்பை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த மாணவியும் தனது செருப்பால் சுதிப்பை அடித்துள்ளார். இதில் சுயநினைவின்றி சுதிப் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவநகர் போலீசார், சுதிப்பை மீட்டு சிகிச்சைக் காக பாகல்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுதிப்பை கைது செய்யாமல், மாணவிக்கு உதவ வந்த சேத்தன் மற்றும் ரோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த அந்த மாணவி மற்றும் வாலிபர்களின் பெற்றோர், போலீசாரின் இந்த செயலுக்கு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் அந்த மாணவி கூறுகையில், என்னை காப்பாற்றியவர்கள் சேத்தனும், ரோகனும் தான். அவர்கள் மீது எந்த தவறும் இல்லை; அவர் களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சுதிப்பை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/sexual-harassment-of-female-student-arrest-of-youths-who-intervened-causes-a-stir




