திருப்பூர், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவிலில் காணப்படும் துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே துப்பாக்கியை தமிழர்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய வீரன் உடுமலையை அடுத்த குறிஞ்சேரியில் குறிஞ்சேரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய வீரனின் கற்சிலை காணப்படுகிறது. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்த பிறகு தான் துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது என்ற தவறான எண்ணத்தை உடைக்கும் வகையில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல் வெட்டுகளில் வீரர்களின் கையில் துப்பாக்கி இடம் பிடித்துள்ளது. இந்த துப்பாக்கி ஏந்திய சிற்பம் குறித்து தொல்லியல் ஆய்வாளர் மூர்த்தீஸ்வரி, உடுமலை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் மதியழகன் மற்றும் ஆசிரி யர் விஜயலட்சுமி ஆகியோர் கூறியதாவது:- '16-ம் நூற்றாண்டின் இறுதியில் உடுமலை பகுதிக்கு வந்த தளி எத்தலப்ப மன்னரின் முன்னோர்கள் குறிஞ்சேரியில் தான் தங்கியுள்ளனர். அதன் பின்னர் தளியில் அரண்மனை அமைத்து ஆட்சி செய்துள்ளனர். எத்தலப்ப மன்னர் தளி எத்தலப்ப மன்னரின் கட்டுப்பாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தளிஞ்சி அருகே துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததாகவும் ஆய்வுகளில் தெரியவருகிறது. மேலும் திருமூர்த்தி மலை, ஜிலோப்பநாயக்கன்பாளையம், பண்ணக்கிணறு, நல்லாம்பள்ளி, வாகைத்தொழுவு செலவநாயக்கன்பட்டி பகுதிகளில் இதுபோன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் உள்ளன. கல் சிற்பத்தில் ஒரு ஆண் இடது கையில் துப்பாக்கியும், வலது கையில் குறுவாளும், இடுப்பில் குத்துவாளும் காணப்படுகிறது. அதுபோல காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு பெண் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற கற்சிற்பம் இருந்துள்ளது தெரிய வருகிறது. இது போன்ற புடைப்புக் கற்சிற்பங்கள் இந்த பகுதியில் பரவலாக இருந்துள்ளது. அதுவும் குறிஞ்சேரியில் தளி பாளையப்பட்டு முன்னோர்கள் தங்கியிருந்ததாக ஆங்கிலேயரின் வருவாய்த்துறை ஆவணங்கள் தெரிவிக்கிறது. இதன் மூலம் குறிஞ்சேரி அம்மன் கோவிலில் இருக்கும் கற்சிலை 18-ம் நூற்றாண்டில் பாளையக்காரர் காலத்தைச் சேர்ந்தது என்பதும், இது தளி எத்தலப்ப மன்னர் காலத்துக்குப் பொருந்தும்' என்று தெரிகிறது. அன்றைய கால துப்பாக்கிகள் ஒருமுறை பயன்படுத்திய பிறகு மறுமுறை மருந்து நிரப்பி பயன்ப டுத்துவதற்கு அதிக நேரம் பிடித்தது. இதனால் வாள், குறுவாள் போன்ற ஆயுதங்களையும் கூடவே வைத்துள்ளதை இந்த சிற்பங்கள் மூலம் அறிய முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-stone-statue-of-a-warrior-holding-a-gun-discovered-at-a-temple




