சென்னை, நான் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் இளையராஜா கொடிகட்டி பறந்தார். அதன்பிறகு ஏ.ஆர்.ரகுமான் வந்து அசத்தினார். இந்த சூழலில் நான் எந்த பாடல் போட்டாலும் அவர் மாதிரி இருக்கே. இவர் மாதிரி இருக்கே. என்று பத்திரிகையில் என்னை கிழித்து எடுத்தார்கள். என நிகழ்ச்சி ஒன்றில் தேவா பேசியுள்ளார். 'தேனிசைத் தென்றல்' தேவா தேவா என்று அழைக்கப்படும் தேவநேசன் சொக்கலிங்கம், தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவரை ரசிகர்கள் அன்போடு 'தேனிசைத் தென்றல்' என்றும், தமிழ் சினிமாவில் 'கானா இசை மன்னன்' (Father of Gaana Genre) என்றும் அழைக்கின்றனர். இவர் கானா பாடல்களை சினிமாவில் புகுத்தி புதிய 'டிரெண்ட்'டை உருவாக்கினார். எனக்கென தனி அடையாளம் இதுகுறித்து இசையமைப்பாளர் தேவா நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இப்போதெல்லாம் பாடல்கள் வேறுமாதிரி சென்றுவிட்டன. 4 வரிகள் கொண்ட பல்லவியை ரசிகர்கள் மனதில் ஏற்றிவிட்டால் போதும் பாடல்கள் 'ஹிட்' அடித்து விடுகின்றன. நான் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் இளையராஜா கொடிகட்டி பறந்தார். அதன்பிறகு ஏ.ஆர்.ரகுமான் வந்து அசத்தினார். இந்த சூழலில் நான் எந்த பாடல் போட்டாலும் அவர் மாதிரி இருக்கே. இவர் மாதிரி இருக்கே. என்று பத்திரிகையில் என்னை கிழித்து எடுத்தார்கள். இப்படி 2 ஜாம்பவான்கள் இருந்த சூழலில் எனக்கென தனி அடையாளம் வேண்டுமே. என்ற ரீதியில் கானா பாடல்களை சினிமாவில் புகுத்தினேன். 'இதெல்லாம் ஒரு பாட்டா.' என விமர்சித்தனர் நான் சென்னைக்காரன் என்பதால் அந்த வட்டார பேச்சும் பொருந்தியது. 'இதெல்லாம் ஒரு பாட்டா.' என்று என்னை விமர்சித்தோரும் ஏராளம். ஆனாலும் என் முயற்சியை விடவில்லை. அப்படித்தான் எனக்கென ஒரு பெயரை ஏற்படுத்தினேன். 'பிளாட் பார்ம் சாங்' என்று பேசப்பட்ட இந்த கானா பாடல்கள் இன்று பெரியளவில் வளர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது”, என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/they-tore-me-apart-in-the-press-deva-recalls-past-criticisms




