துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று காலை இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி ப்ளை துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். திடீர் தாக்குதல் விமானம் புறப்பட்ட 2½ மணி நேரத்தில் சவுதி அரேபியா எல்லையைக் கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானிகள் அறையான காக்பிட்டில் யாரும் எதிர்பாராத அந்த பயங்கரம் அரங்கேறியது. அப்போது துணை விமானி, திடீரென தான் ரகசியமாக மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, தலைமை விமானியை நோக்கி வெறியோடு பாய்ந்து கொடூரமாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த விமானியிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டைப் பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலைத் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்லச் சதி செய்தார் என கூறப்படுகிறது. காக்பிட் கதவு காயமடைந்த நிலையிலும் தலைமை விமானி ஸ்மித் மச்சர், விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியை எதிர்த்து கடுமையாகப் போராடினார். அதே நேரத்தில் விமானத்தில் இருந்து ஆபத்து சிக்னலும் அனுப்பப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் சுதாரித்துக் கொண்டனர். அப்போது விமானி காக்பிட் கதவைத் திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. துணிச்சலாக செயல்பட்டு கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய விமானிக்கு உலக நாடுகளிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில்,குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு, 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். கவுரவம் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘இஸ்ரேல் நோக்கிச் சென்ற ப்ளை துபாய் விமானத்தின் விமானியான ஸ்மித் மச்சாரின் துணிச்சல் இன்று உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும் 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்ற அவர் காட்டிய அசாதாரண துணிச்சல் ஊக்கமளிப்பதாகவும் பாராட்டக்கூடியதாகவும் உள்ளது. குஜராத்தின் இந்த வீர மகன் தனது வீரத்தின் மூலம் குஜராத் மற்றும் நாட்டின் பெயரை உலகம் முழுவதும் ஒளிரச் செய்துள்ளார். அவர் நம்புகளில் ஓடும் குஜராத்திய உணர்வு நம் அனைவருக்கும் மிகுந்த பெருமையை அளிக்கிறது. அவரது அசாதாரணமான துணிச்சல் மற்றம் மனிதாபிமானச் செயலை பாராட்டும் வகையில் குஜராத் அரசு அவருக்கு 'விஷிஷ்ட் குஜராத் கரிமா புரஸ்கார்' விருது வழங்கி கவுரவிக்க உள்ளது”என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/government-award-for-flydubai-pilot-smith-machar-gujarat-chief-minister-announces




