புதுடெல்லி, செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியாவின் அடுத்தக்கட்ட வாய்ப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. செமிகான் 2.0 திட்டம் இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.76 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டை கொண்ட செமிகான் 1.0 திட்டத்தின் கீழ், சுமார் ரூ.1.64 லட்சம் கோடி மொத்த முதலீடுகளுடன் 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவின் செமிகண்டக்டர் ஊக்கத்தொகைகளின் இந்த முதல் கட்டமானது, அடிப்படை கட்டமைப்பு, பேக்கேஜிங் மற்றும் வடிவமைப்பு ஆகிய துறைகளில் உற்பத்தித்திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதைத்தொடர்ந்து செமிகான் 2.0 என்ற பெயரில் 2-ம் கட்ட செமிகண்டக்டர் உற்பத்தி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இதற்காக ரூ.1.275 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டது. செமிகண்டக்டர் சங்கம் செமிகான் 2.0 திட்டத்தை பொறுத்தவரை, வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், மேம்பட்ட பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை கொண்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே அதாவது அடுத்தகட்டத்தை நோக்கி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த அடுத்தகட்ட உற்பத்தி துறையில் இந்தியாவின் வாய்ப்புகள் எவ்வாறு இருக்கும் என இந்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டர் சங்கம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டின் சிப் முன்னெடுப்பின் அடுத்த கட்டமானது, அறிவிக்கப்படும் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கையை விட, அவற்றை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அமைப்பின் ஆழத்தை பொறுத்து அதிகம் வடிவமைக் கப்படும் என கூறப்பட்டு உள்ளது. 20 சதவீத என்ஜினீயர்கள் உலகின் செமிகண்டக்டர் வடிவமைப்பு என்ஜினீயர்களில் சுமார் 20 சதவீதம் பேர் ஏற்கனவே இந்தியாவில் உள்ளனர். ஆனால் உற்பத்தி மற்றும் பேக்கே ஜிங் திறனை விரிவுபடுத்துவதற்கு, புதிய ஆலைகளின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற பயிற்சி தேவைப்படும் என அறிக்கை தெரிவித்து உள்ளது. மேலும், ஒரு செமிகண்டக்டர் ஆலையின் பொருளாதாரம், அதன் ஆரம்ப மூலதன செலவை மட்டுமின்றி, அதன் செயல்பாட்டுக்காலம் முழுவதும் கிடைக்கும் மூலப்பொருட்கள், உதிரி பாகங்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றின் கிடைக்கும் தன்மை, தரம் மற்றும் செலவு ஆகியவற்றையும் சார்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. தொடர் இடைவெளி அத்துடன் இறக்குமதி செய்யப்படும் உள்ளீடுகளைப் பெருமளவில் சார்ந்திருப்பது, உள்நாட்டு மதிப்புக்கூட்டலில் அதற்கேற்ற அதிகரிப்பை ஏற்படுத்தாமலேயே, உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தியை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது. செமிகான் 2.0 திட்டம் மதிப்புச்சங்கிலியின் ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், உள்கட்டமைப்பு, உள்நாட்டு வினியோகஸ்தர்கள், தொழில்நுட்ப அணுகல், திறமை மற்றும் வணிகமயமாக்கல் திறன்களில் தொடர்ச்சியான இடைவெளிகள் இருப்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/indias-semiconductor-opportunity-expanding-beyond-fabs-report




