சென்னை, தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும். வயது வரம்பு மற்றும் ஒருவர் அதிக முறை பதவியில் இருக்க முடியாது என்ற வரம்புகள் காரணமாக பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடமாட்டேன். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் முடிவெடுப்பேன். கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன்தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும். இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். திமுக மறுசீரமைப்பு பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். வயது வரம்பால் பொறுப்பிழப்பவர்களுக்கு வேறு பொறுப்புகள் வழங்கப்படும். சுதந்திரமான நேர்மையான தேர்தலில் புதிய நிர்வாகிகள் வருவார்கள்" இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/fireflies-are-not-permanent-the-sun-is-permanent-mk-stalin




