சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ‘டெலிவரி பாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி கடந்த 3ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில், ‘டெலிவரி பாய்’ படத்தின் முதல் பாடலான ‘செங்காத்தியே’ இன்று வெளியாகியுள்ளது. மோகன் ராஜா எழுதியுள்ள இப்பாடலை விஷ்ணு ராம் பாடியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. The wait is over!#Sengathiye – The First Single from is out now! ❤️ — AIM PRO (@teamaimpr) July 17, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/delivery-boy-film-sengathiye-song-out




