Fuld artikel
கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு அப்துல்லா மற்றும் அவரது மனைவி நிஷாந்த் ஆகியோர் 38 வயதுடைய பெண்ணுடன் குடும்ப நண்பராகப் பழகி வந்தனர். அப்போது ஆசிக்பாபுவின் பேச்சு மற்றும் நடத்தைகளில் மாற்றம் இருந்தால் அந்தப் பெண், ஆசிக்பாபுவிடம் பேசுவதைத் தவிர்த்து விட்டார். ஆனாலும் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனப் பேசி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன உலைச்சலுக்கு ஆளான அந்தப் பெண் தான் குடியிருந்த தெருவில் இருந்து வீட்டைக் காலி செய்து வேறு தெருவில் குடியேறினார். பெண்ணிடம் அத்துமீறல் இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அந்தப் பெண் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது அந்தப் பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கம்பம் தெற்கு போலீசார் ஆசிக் பாபு மீது கொலை மிரட்டல், ஆபசாமாகப் பேசியது,பெண்களுக்கு எதிராக அத்துமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிக் பாபு தலைமறைவாகியுள்ளார் அவரைத் தேடும் பணிகளில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். `வரும் திங்கட்கிழமை' - தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




