சிங்கப்பூர் சிங்கப்பூரில் பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சிங்கப்பூர் நாடு தூய்மையை கடைப்பிடிப்பதிலும், பராமரிப்பதிலும் முன்னணி நாடாக உள்ளது. அதனை பொதுமக்களும் முறையாக கடைப்பிடித்து அரசுக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இவற்றை மீறும் நபர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை உள்ளிட்டவை விதிக்கப்படுகின்றன. பயணிகளுக்கு இடையூறு இந்த நிலையில், பஸ் பயணிகளுக்கு இடையூறு செய்தால் அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய விதிகள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த விதிகளின்படி, பஸ் இருக்கைகள் மீது கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோவை ஒலிக்க செய்து கேட்பது, பஸ்சுக்குள் உண்பது, மது அருந்துவது அல்லது குப்பை கொட்டுவது போன்ற செயல்களுக்காக பஸ் பயணிகள் 500 சிங்கப்பூர் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.37,457) வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பஸ் கேப்டன்கள் அரசு பஸ்சின் எந்த பகுதியிலாவது அழுக்கு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.3.74 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த செயல்களில் ஈடுபடும் பயணிகளை தடுத்து நிறுத்தும் மற்றும் அறிவுறுத்தும் அதிகாரம் பஸ் கேப்டன்களுக்கு உண்டு. ஆனால், இந்த செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு அவர்கள் நேரடியாக அபராதம் விதிக்கவோ அல்லது நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. அதற்கு என்று தனியாக டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரம்பெற்ற பணியாளர்கள் ஈடுபடுவார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/singappur-bus-payanigalukku-idaiyuru-seithal-ru-3-7-latcham-aparatham




