விமான நிலையங்கள் என்றாலே பெரிய கட்டிடங்கள். நீண்ட ஓடுபாதைகள், அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில விமான நிலையங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைந்துள்ளன. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ஓடு பாதையில் விமானங்களை இயக்குவதும் சவாலானதாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான்,சிறிய வணிக விமான நிலையமாக விளங்கும் 'ஜூவான்சோ இ. ய்ராஸ்கின்'. உல கின் மிகக்குறுகிய வணிக விமான ஓடுபாதையை கொண்ட விமான நிலையமாக அறியப்படுகிறது. இந்த விமான நிலையம் கரீபியன் கடலில் உள்ள சபா என்ற சிறிய தீவில் அமைந்துள்ளது. இந்தத் தீவு நெதர் லாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாகும். இந்த விமான நிலையத்தின் சிறப்பம்சம் மிகக்குறுகிய ஓடு பாதையை கொண்டிருப்பதுதான். அதாவது ஓடுபாதையின் நீளம் சுமார் 400 மீட்டர் மட்டுமே. மிகக்குறைந்த பரப்பளவு காரணமாக இங்கு ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே உள்ளது. அது வும் குறுகியதாக இருப்பதால் பெரிய விமானங்களை இங்கு தரையிறக்க முடியாது. அதனால் பெரிய சர்வதேச விமான நிலையங்களை போல பயணிகளுக்கு சவுகரியமான வசதிகள் இங்கு இல்லை. சிறிய ரக விமானங்களே இங்கு இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலை யம் அருகிலுள்ள கரீபியன் தீவுகளுடன் இருக்கும் இடங்களை போக்குவரத்து ரீதியாக இணைக்கிறது. இந்த விமான நிலையத்தின் ஒரு புறத்தில் உயரமான மலைப்பகுதிகளும், மறுபுறத்தில் கட லும் காணப்படுகின்றன. அத்துடன் ஓடுபாதையின் இருபுறமும் விமானங்கள் சுதந்திரமாக செல்லக்கூடிய அளவுக்கு இட வசதி இல்லை என்பதால் விமானம் தரையிறங்குவதும், புறப்படுவதும் சவாலானதாக இருக்கிறது. குறிப்பாக. காற்றின் வேகம் மற்றும் திசையில் ஏற்படும் மாற்றங்களை விமானிகள் கவனமாக கையாள வேண்டும். ஓடுபாதையின் முடிவில் கடலும், செங்குத்தான பாறைப்பகுதிகளும் இருப்பதால், அவசரநிலைகளின்போது விமானிகளுக்கு கூடுதல் கவனமும், திறமையும் தேவைப்படும். இதன் காரணமாக, இந்த விமான நிலையத் தில் விமானங்களை இயக்குவதற்கு விமானிகளுக்கு சிறப்பு அனுபவமும், பயிற்சியும் அவசியமாகிறது. இந்த விமான நிலையம் அளவில் சிறியதாக இருந்தாலும் சபா தீவை அருகிலுள்ள பகுதிக ளுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சபா தீவு மக்கள் அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கு சூழலுக்கு ஏற்ப சென்று வருவதற்கான முக்கியமான போக்குவரத்து வாயிலாக விளங்குகிறது. அத்துடன் இயற்கை அழகு, மலைப்பகுதிகள் மற்றும் அமைதியான சூழல் காரணமாக சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/the-airport-with-the-shortest-runway-in-the-world




