துபாய், 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதியில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இன்றிரவு நடக்கும் 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பிய னான இலங்கை அணி, பாகிஸ்தானுடன் மல்லுகட்டுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமரி அதபது பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் தொடக்கம் முதல் தடுமாறியது.அதன் பிறகு கேப்டன் பாத்திமா சனா ஆட்டத்தை மாற்றினார். பாத்திமா சனா மிகவும் சிறப்பாக விளையாடி 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.இலங்கையின் பந்துவீச்சில் சமரி அதபது 2 விக்கெட்டுகளும், சமுதி பிரபோதா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/asia-cup-semifinal-pakistan-sets-a-target-of-131-runs-for-sri-lanka




