சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக பரவும் தவறான தகவல் பரவும் செய்தி காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பான பணிகள், தற்பொழுது புதிதாக தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்ன? இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 2022-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலம் உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்பொழுதும் அதே நடைமுறையே பின்பற்றப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/misinformation-circulating-regarding-the-kamarajar-breakfast-scheme-fact-check-units-clarification




