கடலூர், கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 44). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன்(36). விவசாயி. இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வீட்டிற்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினர். இதனை பார்த்து அதிர்ச்சியான ராமகிருஷ்ணன் அவர்களை தடுக்க முயன்றார். அந்த கும்பல் அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சம்பல இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராமகிருஷ்ணன் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தீவிர சிகிச்சை இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் கிடந்த ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகர் அரசு கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரின் 2 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்ததால், உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சகோதரர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட இடம், அவர்களது வீடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லாவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புதுச்சத்திரம் வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சகோதரர்களை வெட்டிக்கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், சகோதரர்களை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணை போலீசாரின் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளன. கொலை செய்யப்பட்டவர்களுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த கனகசபை என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றிரவு சகோதரர்கள் வயலுக்கு மோட்டார் போடுவதற்காக செல்வதை அறிந்ததும், கனகசபை, அவரது மகன் பாண்டியன் என்ற கனகராஜ் ஆகியோர் 8 பேர் கும்பலுடன் அங்கு சென்று சகோதரர்களை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைது இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கனகசபையின் மகன் பாண்டியன் என்ற கனகராஜ்(30), தேவராஜ்(30), துரை என்ற யுவராஜ், மணிக்கொல்லையை சேர்ந்த யுவராஜ்(30), வில்லியனூரை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கனகசபை உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/cuddalore-2-brothers-hacked-to-death-over-land-dispute-5-arrested




