சென்னை, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமையலில் அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது. வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள கிடங்குகளில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sale-of-onions-begins-in-ration-shops-across-tamil-nadu




