சிவகங்கை, கண்மாய்க்குள் ஓட, ஓட விரட்டி 2 வாலிபர்களை ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. புதிய காரையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றது. கொடிக்காடு கண்மாய் சிவகங்கையை அடுத்த குருந்தணி அருகே காயா ஓடை புதுகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 35). கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மதுபார் நடத்தி வருகிறார். இவர் புதியதாக கார் ஒன்றை சிவகங்கையில் வாங்கி இருந்தார். அந்த காரின் முதல் சர்வீசுக்காக ஊருக்கு வந்தார். இந்நிலையில் தெய்வேந்திரனும், மறவமங்கலத்தை அடுத்த சிறுவேலங்குடியை சேர்ந்த பூப்பாண்டியும் (30) அந்த காரில் நேற்று மதியம் சிவகங்கையில் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு சென்றனர். கண்மாய் கரையில் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது 3 மோட்டார்சைக்கிள்களில் கும்பலாக சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதைப்பார்த்ததும் தெய்வேந்திரன், பூப்பாண்டி ஆகிய 2 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள கண்மாய்க்குள் இறங்கி ஓடினர். சரமாரியாக வெட்டிக்கொலை பின்தொடர்ந்து ஓடிய அந்த நபர்கள், தெய்வேந்திரனையும், பூப்பாண்டியையும் ஓட ஓட சரமாரியாக வெட்டிக்கொன்றனர். மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவர்களின் முகத்தை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்தனர். தொடர்ந்து தெய்வேந்திரன் வாங்கிய புதிய காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் அந்த கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டது. போலீஸ் விசாரணை இந்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, துணை சூப்பிரண்டு அமல அட்வின், நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். 5 பேர் கைது சம்பவம் நடந்த கண்மாய் கரையில் மதுபான பாட்டில்கள், 3 ஜோடி செருப்புகள் கிடந்தன. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கூறும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிவகங்கையில் நேற்று நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கொலை வழக்கில் தொடர்புடைய பாலமுருகன்(24), தனராஜ் (19), சந்தோஷ்(19), சதீஷ்குமார்(25) மற்றும் காளீஸ்வரன்(23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/horror-in-sivaganga-two-youths-hacked-to-death-after-being-chased-5-arrested




