திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. அரசு பஸ் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் அணை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி புஷ்பா (வயது 31). கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ந் தேதி அருள் திருவண்ணாமலை - போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல பஸ் அவர் மீது மோதி உயிரிழந்தார். இழப்பீடு இதையடுத்து தனது கணவரின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி புஷ்பா திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட அருள் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.38 லட்சத்து 57 ஆயிரத்து 91 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் இதுவரை எந்தவித இழப்பீடு தொகையும் வழங்காமல் காலதாமதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து புஷ்பா இழப்பீடு தொகையை வசூலித்துத் தரக்கோரி நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். ஜப்தி இந்த மனுவை விசாரித்த திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதிசாய்பிரியா மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று காலை கோர்ட்டு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை புதிய பஸ் நிலையத்திற்கு சென்ற கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம் மண்டல போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்தனர். பின்னர் ஜப்தி செய்யப்பட்ட பஸ் திருவண்ணாமலை கோர்ட்டு வளாகத் திற்கு கொண்டு வரப்பட்டது. அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பஸ் நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruvannamalai-government-bus-attached-for-failure-to-pay-compensation-to-the-family-of-an-accident-victim




