சென்னை, தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு ஆஸ் பத்திரிகளில் நடைபெறுகின்றன. அரசு ஆஸ்பத்திரிகளில் பிரச வங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் குழந்தைகளுக்கு 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 22.6.2026 அன்று முதல் அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்து. அதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. முதல் தவணையாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதனையடுத்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்து கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்ப் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009 ஆண்டு தொடங்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 86-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாநகராட்சியால் தூய தமிழ்ப் பெயர்களை ஊக்குவிக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழில் பெயர் வைக்கப்படும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அன்றைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால், நாம் மேயராக இருந்தபோது இத்திட்டம் தொடங்கி வைக்கபட்டது. தமிழ்ப் பெயர்களை ஊக்குவிப்பதும், அரசு மருத்துவமனைப் பிரசவங்களை அதிகரிப்பதுமான நோக்கதோடு வெற்றிகரமாக சற்றொப்ப 17 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவிலேயே முதன்முறையாக தொடங்கி நடைமுறைப்படுத்தியது திராவிடமாடல் மாநகராட்சி நிர்வாகம் தான் என்பதை எண்ணி பெருமைகொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-launched-the-scheme-to-provide-a-1-gram-gold-ring-back-in-2009-ma-subramanian




