நெல்லை மாவட்டம், கொண்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரும், கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அமராவதி என்பவரும் கடந்த 2008-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருமே கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், தன் மகளைப் பார்ப்பதற்காக அமராவதியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்கை கொண்டான் வந்துள்ளனர். ஆனால், அங்கு அமராவதி இல்லை. சுத்தமல்லி காவல் நிலையம் அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன்பே வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். தனது மருமகனான மகாராஜனுக்கு போன் செய்து அமராவதி குறித்து கேட்டபோது அமராவதி தன்னுடன் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், அவள் எங்கு சென்றார் என்பது குறித்து எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளாராம். இதனையடுத்து அமராவதியின் தயார் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அமராவதியின் கணவரது செல்போன் அழைப்பு விவரங்களை சேகரித்து அவரது இருப்பிடத்தை அறிந்து அவரை அழைத்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில், “எனது அத்தை மகளான அகிலா என்பவரை கடந்த 2024-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டேன். அதற்கு அமராவதி கடும் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டதால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகாராறு ஏற்பட்டது. இதனால் முதல் மனைவி அமராவதியை கொலை செய்ய முடிவெடுத்தேன். சுத்தமல்லி காவல் நிலையம் கடந்த 2025-ம் ஆண்டு மே மாதம் நாங்கள் வேலை செய்யும் கங்கை கொண்டன் சிப்காட் அருகிலுள்ள பாப்பாங்குளம் விலக்கு பகுதியிலுள்ள கல்குவாரிக்கு அழைத்துச் சென்று கல்குவாரி பள்ளத்தில் தள்ளிவிட்டேன். அதன் பிறகு வேலைக்குச் சென்றுவிட்டேன்.” எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கல்குவாரி பள்ளத்தில் கிடந்த மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள், சேலை ஆகியவற்றை மீட்டனர். இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை கணவனே கொலை செய்து நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/wife-who-opposed-second-marriage-found-as-a-skeleton-after-a-year-and-a-half




