கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், "அன்பான நண்பர்களே, உங்களிடம் ஒரு ஜோக் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பிரகாஷ் ராஜ் SIR (சிறப்புத் தீவிர திருத்தம்) நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நல்ல ஜோக், இது. நான் இந்தத் தொகுதியில்தான் பிறந்தேன். இந்தத் தொகுதியில்தான் வாழ்ந்தேன். எனது பள்ளிப்படிப்பு, கல்லூரி, நாடகம் எல்லாமே இங்குதான். உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன், நான் இந்தத் தொகுதியின் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறேன். ஆட்டம் ஆரம்பம். எனது வாக்காளர் அடையாள அட்டையை மீண்டும் பெற நான் என்னென்ன நடைமுறைகளைக் கடக்க வேண்டும் என்று பார்க்கிறேன். ஆனால் எனது நண்பரே (பிரதமர்) உங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று நினைக்கும் சில குடிமக்களின் வாக்கு உரிமையை மறுக்க உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம். டெல்லி போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் ஆனால் உங்களை அரியணையலிருந்து கீழே இறக்கும் எங்கள் சக்தியை உங்களால் தடுக்க முடியுமா?" என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் நீட் முறைகேடு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "இதே நிலை நீடித்தால் உங்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவார்கள்" - மோடியைச் சாடிய பிரகாஷ் ராஜ் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/prakash-raj-claims-his-name-deleted-from-bengaluru-voter-list-during-sir




