தேனி, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே குள்ளப்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). இவர் மீது கடந்த 2022-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கார்த்திக்கை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கார்த்திக்கை தேடிப் பிடித்து போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் ஏட்டுகள் நாகராஜன், முத்துக்குமார் ஆகியோர் லட்சுமிபுரத்தில் உள்ள தேனி மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர். அப்போது கார்த்திக் போலீசாரை ஏமாற்றிவிட்டு கோர்ட்டு சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை. இது குறித்து ஏட்டு நாகராஜன் அளித்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் வழக் குப்பதிவு செய்து கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/theni-prisoner-brought-to-court-by-police-climbs-over-wall-and-escapes




