சின்னத்திரையில் 'சிவசக்தி', 'மௌன ராகம்', 'பேரன்பு' எனப் பல்வேறு வெற்றித் தொடர்கள் மூலம் குடும்பங்களுக்கு பேவரிட்டானவர் நடிகை ஷமிதா. தற்போது இவர் மீண்டும் வில்லியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சாமந்தி' தொடரில் நடிக்கக் கமிட்டாகியிருக்கிறார். அந்த சீரியலுக்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Shamitha - Samanthi Serial நம்மிடையே பேசியவர், "'சாமந்தி' தொடரின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் நான் 'அரசி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த அரசிக்கு மனிதர்களையே பிடிக்காது, யாரையுமே நம்ப மாட்டார்கள். அதனால்தான் எப்போதும் கூடவே ஒரு ரோபோட்டை வைத்திருப்பார்கள். இந்த சீரியலின் முக்கியமான விஷயமே ரோபோட்தான். அது எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளும். அதன் மூலம் மனிதர்களின் இயல்பு எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த ரோபோட் கதாபாத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையான வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்த முடியாத பல எதிர்மறையான உணர்வுகள் நமக்குள்ளும் இருக்கும். இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை நடிப்பில் வெளிப்படுத்துவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். நெகட்டிவ் ரோல் பண்ணுவதில் ஒரு தனி ஜாலி இருக்கிறது. அதற்கு எந்த எல்லைகளும் கிடையாது, நாம் எப்படி வேண்டுமானாலும் நடித்து எக்ஸ்பெரிமென்ட் பண்ணலாம். 'மௌன ராகம்' பண்ணும்போது வயதானவர்கள் மட்டும், 'ஏன் அந்த குழந்தைகளை இப்படிப் படுத்துறீங்க?' என்று திட்டினார்கள். Shamitha - Samanthi Serial ஆனால் குட்டீஸ் எல்லாம் 'சூப்பர் மேம்' என்பார்கள்" என்றவர், "'பொன்னூஞ்சல்' சீரியலுக்குப் பிறகு இப்போது மீண்டும் விஷ்வா சாருடன் இணைந்து நடிக்கிறேன். முதலில் இதை என்னால் நம்பவே முடியவில்லை. இப்போதெல்லாம் சீரியல் சூழல் நிறைய மாறிவிட்டதால் அவர் ஒப்புக்கொள்வாரா என யோசித்தேன். ப்ரோமோ ஷூட்டின் போது 'நீங்க நிஜமாவே பண்றீங்களா?' என்று கேட்டதற்கு, 'ஏன் நான் பண்ணக்கூடாதா?' என்று ஜாலியாகக் கேட்டார்" என்றார். தொடர்ந்து பேசியவர், "ஆரம்பத்தில் எனக்கு சீரியலில் நடிக்க விருப்பமே இல்லை. சீரியலில் 'எப்போதும் அழுதுகொண்டே இருப்பார்கள்' என்று என் அம்மாவிடம் சொன்னேன். ஆனால் பெரிய வாய்ப்புகள் வந்தபோது அம்மாதான் 'ட்ரை பண்ணிப் பாரு, பிடிக்கவில்லை என்றால் வந்துவிடு' என்று தைரியம் சொன்னார். அப்படி முதன்முதலில் நடித்ததுதான் 'சிவசக்தி'. நானும் என்னுடைய கணவர் ஸ்ரீயும் வீட்டில் பெரும்பாலும் நடிப்பைப் பற்றித்தான் அதிகம் பேசிப்போம். Shamitha - Samanthi Serial தனிப்பட்ட விஷயங்களை விட நடிப்பு பற்றிய பேச்சுகளே அதிகமாக இருக்கும். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றி டிரோல்கள் வரும்போது, 'நீ செய்கிற வேலையைச் செய்துகொண்டே இரு, நெகட்டிவ் கமெண்ட்ஸைப் பார்க்காதே' என்று சொல்வேன். தேவையில்லாத விஷயங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நம் நேரம்தான் வீணாகும். பயனுள்ளதாக இருந்தால் எடுத்துக்கொள்ளலாம், மற்றபடி கடந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும்" எனப் பகிர்ந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/television/actress-shamitha-shree-interview-samandhi-serial-husband-sree




