Fuld artikel
மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடந்த மதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் விழாவிற்கு வருவார்களா என எதிர்பார்க்கிறேன். அது அவர்கள் முடிவு. மக்கள் நலனுக்காக கருவேலமரங்களை அகற்றுகிறோம். ஓட்டு கிடைக்காத ஒரு வேலையில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும் தமிழ்நாட்டின் நலனுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வேலையைச் செய்கிறேன். தமிழ்நாட்டு வாழ்வாதார கடமைகளில் எல்லாக் கட்சிகளையும் விட முன்னணியில் நிற்பது ம.தி.மு.க தான். 27 ஆம் தேதி பொதுக்குழு கூடுகிறது. அந்தப் பொதுக்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்பட்டு பொதுக்குழு தீர்மானங்களை வடித்தெடுக்க உள்ளோம். வைகோ என்னுடைய பயணங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது தொடர்ந்து கொண்டே இருக்கும். விலகி விட்டேன் என்று சொல்பவர்கள், மந்திரி சபையில் சேர்ந்து விட்டேன் என்று சொல்பவர்கள், திமுக-வில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள் எனக்கு ஒன்றுமே புரியவே இல்லை. இந்த மாதிரியான நிலைப்பாடு அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அதைப்பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முனைந்தது உண்மையாக இருக்குமானால் அதைவிட அரசியல் மோசடி ஒன்று இருக்க முடியாது'' என்றார். வைகோ விஜய்யின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை குறித்த கேள்விக்கு, ''சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என் நான் நம்புகிறேன்,'' என்றார். 'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



