வாலாஜாபேட்டை, சிங்கப்பூர் துறைமுகத்தில் கன்டெய்னருடன் கடலில் விழுந்து படுகாயமடைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் வினோத் (35). பட்டப்படிப்பு முடித்திருந்த வினோத், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விபத்து இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு துறைமுகத்தில் வினோத் உள்ளிட்ட 2 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கன்டெய்னருடன் இருவரும் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சை இதையடுத்து சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட வினோத், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி வினோத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த வினோத் மற்றும் துரை ஆகியோரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டது. அதன்படி, வினோத்தின் உடல் நேற்று தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊரான நரசிங்கபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வினோத்தின் உடலை பார்த்த அவரது மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இளைஞர் துறைமுக விபத்தில் உயிரிழந்த சம்பவம் நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-youth-who-fell-into-the-sea-with-a-container-at-the-singapore-port-died-without-treatment




