35 வயதைக் கடந்த பின் நம்மில் பலருக்கும் ஓரளவு சம்பளம் உயர்கிறது. ஆனால், பணம் கைக்கு வருவதும் தெரியவில்லை, கரைவதும் தெரியவில்லை! இதில் நீங்களும் ஒருவரா? 10 வருஷத்துக்கு முன்னாடி ₹30,000 சம்பளம் வாங்கியபோதும் சரி, இன்னைக்கு ₹1 லட்சம் வாங்கினாலும் சரி. மாதக் கடைசியில் "அடடா, இந்த மாசமும் பெருசா ஒன்னும் சேமிக்க முடியலையே!" என்கிற புலம்பல் மாறவே இல்லை. பெரிய வீடு, பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ், கார் EMI, லேட்டஸ்ட் கேட்ஜெட்ஸ், வீக்கெண்ட் ட்ரிப் என நம் 'லைஃப்ஸ்டைல்' வளர்கிறதே தவிர, நம் உண்மையான 'சொத்து' வளருவதில்லை. 30 மற்றும் 40-களில் நாம் விழும் மிகப்பெரிய நிதிப் பொறி (Financial Trap) இதுதான்! கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) 2025 ரிட்டயர்மென்ட் ஆய்வு சொல்வதும் இதையேதான்: வீடு, மருத்துவம், கடன், குடும்பப் பொறுப்புகள் ஆகியவைதான் நடுத்தர வயதினரின் ஓய்வுகாலச் சேமிப்பை அப்படியே உறிஞ்சி விடுகின்றன. money mistakes தவறு எங்கே நடக்கிறது? பெரும்பாலானவர்கள் போடும் கணக்கு இதுதான்: வருமானம் – செலவுகள் = முதலீடு (மிஞ்சினால்!) இந்த ஃபார்முலாவே தப்புங்க! ஏன்னா, வருமானம் வளர வளர நம் செலவுகளும் அதை முழுமையாக விழுங்கும் அளவுக்கு வளரக்கூடியவை. இனி ஃபார்முலாவை தலைகீழாக மாற்றுங்கள்: வருமானம் – முதலீடு = செலவுக்கான பணம் "இந்த மாசம் செலவு போக எவ்வளவு மிஞ்சும்?" என்று கேட்காதீர்கள். "என்னுடைய எதிர்காலத்திற்காக இன்றே நான் எவ்வளவு பணத்தைப் பாதுகாத்து வைக்க வேண்டும்?" என்று கேளுங்கள். இந்த மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் 'ஆட்டோமேடிக்' முறையில் செய்து முடிக்கும் மாயாஜாலக் கருவிதான் SIP (Systematic Investment Plan). ஒரு குட்டி கணக்கு. பெரிய ஆச்சரியம்! 35 வயதில் நீங்கள் மாதம் ₹20,000 SIP செய்யத் தொடங்குகிறீர்கள் என்று வைப்போம். (ஆண்டுக்கு தோராயமாக 10% வருமானம் என வைத்துக்கொண்டால்): 15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்வது: ₹36 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும் தோராயத் தொகை: ₹83 லட்சம்! சரி, இதையே கொஞ்சம் ஸ்மார்ட்டா செய்வோம். உங்கள் சம்பளம் உயரும்போது, ஒவ்வொரு ஆண்டும் SIP தொகையை வெறும் 10% Step-up (உயர்த்துதல்) செய்கிறீர்கள். 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு: ₹76 லட்சம் உங்களுக்குக் கிடைக்கும் தோராயத் தொகை: சுமார் ₹1.57 கோடி! பார்த்தீர்களா? உங்கள் வருமானம் வளரும் வேகத்திலேயே உங்கள் முதலீடும் வளர வேண்டும். Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும்மியூச்சுவல் ஃபண்ட் SIP உங்களுக்கான 4 சூப்பர் ஸ்டெப்ஸ் இலக்கைத் தீர்மானியுங்கள்: ஓய்வுக்காலமா, பிள்ளைகளின் மேற்படிப்பா? தொகையையும் ஆண்டுகளையும் குறித்து வையுங்கள். பின்னோக்கிக் கணக்கிடுங்கள்: பணவீக்கத்தைக் (Inflation) கணக்கில் கொண்டு, மாதச் சேமிப்பைத் தீர்மானியுங்கள். உடனே தொடங்குங்கள்: "மார்க்கெட் இறங்கட்டும்", "செலவு குறையட்டும்" எனத் தள்ளிப்போடாதீர்கள். ஆண்டுதோறும் உயர்த்துங்கள்: 10% Step-up உங்களுக்கான கூட்டு வளர்ச்சி (Compounding) சக்தியை இரட்டிப்பாக்கும். சமீபத்திய செபி (SEBI) 2025 முதலீட்டாளர் ஆய்வு சொல்வது என்னவென்றால் - "முதலீடு செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு பலருக்கு இருக்கிறது, ஆனால் அதைச் செயலாக மாற்றுபவர்கள் குறைவு." நோக்கம் மட்டும் போதாது, அதை செயல்படுத்தும் 'சிஸ்டம்' தான் முக்கியம்! 15 வருடங்கள் கழித்து, "எனக்கு SIP பத்தி அப்பவே தெரியுமே" என்று சொல்வதில் பயனில்லை. "என் வருமானத்தை வைத்து என் எதிர்காலத்தை நான் வாங்கிவிட்டேன்" என்று சொல்வதே உண்மையான கெத்து! Labham Webinar August 26 2026 உங்கள் SIP ஸ்ட்ராட்டஜியை உருவாக்க நேரலை வழிகாட்டல்! நிகழ்ச்சி: SIP மூலம் செல்வம் சேர்ப்பது எப்படி? – 30–45+ வயதினருக்கான முதலீட்டு வழிகாட்டல் நிகழ்ச்சி சிறப்பம்சம்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SIP அடிப்படை | லாபத்தை அதிகரித்து, நஷ்டத்தைக் குறைக்கும் வழிகள் நாள்: ஆகஸ்ட் 26, 2026 (புதன்கிழமை) நேரம்: மாலை 07:00 – 08:30 மணி (IST) பேச்சாளர்: டீம் லாபம் லாபம் வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய: முன்பதிவு நாளை முடிவடைகிறேது. தவற விடாதீர்கள்! முதலீடு மூலம் உங்கள் எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள்! (பொறுப்புத் துறப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் அனைத்தும் விளக்க நோக்கத்திற்காக மட்டுமே; இவை உத்தரவாதமளிக்கப்பட்ட வருமானம் அல்ல. கடந்தகால செயல்பாடுகள் எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதம் அல்ல.) Personal Finance: இந்த மாதிரி பட்ஜெட் போட்டா, 10 வருஷத்துல ₹23 லட்சம் சேர்க்கலாம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/personal-finance/making-this-investment-mistake-how-to-become-wealthy-via-sip



