ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தனது ரீடைல் விற்பனைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டும் வகையில், தனது 69வது ஷோரூமை புதுக்கோட்டையில் செப்டம்பர் 13, 2026 அன்று திறந்தது. புதுக்கோட்டை, அண்ணா சாலை, காந்தி பூங்கா எதிரில், அமைந்துள்ள இந்தப் புதிய ஷோரூம், தென்னிந்தியாவில் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வளர்ந்து வரும் விற்பனை வலையமைப்பில் மேலும் ஒரு முக்கிய இணைப்பாக அமைகிறது. ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் புதுக்கோட்டை ஷோரூமில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் எனப் பல்வேறு வகையான நகைகள் இடம் பெற்றுள்ளது. திருமணம், பண்டிகைகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கேற்ற பல்வேறு நகைத் தொகுப்புகளை வாடிக்கையாளர்கள் இங்கு தேர்வு செய்யலாம். திருமண நகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன், வெள்ளி நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான பல்வேறு தேர்வுகளும் இடம்பெறும். GRT 1964 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், தனது நீண்ட பயணத்தில் பல ஆண்டுகளாக தனது விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதே நேரத்தில், நகை உருவாக்கத்தின் நேர்த்தி, தூய்மை, வடிவமைப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றில் தனது கவனத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. இந்த வளர்ச்சிப் பயணத்தை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களான திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் மற்றும் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர். ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு, பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன: தங்க நகைகளின் மீது கிராமிற்கு ரூ.250 குறைவு, பழைய தங்க நகை எக்ஸ்சேன்ஜின் மீது கிராமிற்கு ரூ.150 கூடுதல் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பின் மீது 12.5% குறைவு (சாலிடேர்கள் தவிர) வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின் (VA) மீது 25% குறைவு வெள்ளி நகைகளின் MRP- மீது 10% குறைவாக வழங்கப்படும் இந்தச் சலுகைகள் புதுக்கோட்டை ஷோரூமில் மட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) ஷோரூம் திறப்புடன் ஜிஆர்டி கோல்டன் லெவேன் பிளக்ஸி ஜுவல்லரி பர்சேஸ் பிளான் எனப்படும் மாதாந்திர நகை சேமிப்புத் திட்டத்தில் இணைந்து 18% வரை சேதாரம் (VA) இல்லமால் நகையை வாங்க இயலும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்யும் வகையில், இந்தத் திட்டத்தில் Weight-Based மற்றும் Value-Based என இரண்டு வகையான விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதில் தங்களுக்கு அதிக பயனளிக்கும் விருப்பத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். GRT மேலும், இந்த நகை வாங்கும் திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்கள் பரிசு + பரிசு போனான்ஸாவை பெறலாம். பதிய ஷோரூம் குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் கூறுகையில், "எங்களின் முதல் ஷோரூமிலிருந்து 69வது ஷோரூம் வரையிலான இந்தப் பயணம், தலைமுறை தலைமுறையாக எங்கள் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் நம்பிக்கையாலும் ஆதரவாலும் உருவானது. ஒவ்வொரு புதிய ஷோரூமும், அந்த உறவை மேலும் வலுப்படுத்தவும், புதிய சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. எங்களின் பயணத்தில் புதுக்கோட்டை ஒரு முக்கியமான புதிய அத்தியாயமாகும். இப்பகுதி மக்களின் குடும்பக் கொண்டாட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒரு அங்கமாக இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்றார். ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "எங்களின் விரிவாக்கம் என்பது எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கமாகச் செல்வதையும், எங்களின் நகைத் தொகுப்புகள் மற்றும் சேவைகளை அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையில் எங்களின் 69வது ஷோரூம் திறக்கப்படுவது அந்தப் பயணத்தின் மற்றொரு முக்கியமான படியாகும். ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் அனுபவத்தை புதுக்கோட்டை நகர மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்குள்ள வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/sponsored/sponsor-content/grt-jewellers-69th-showroom-new-pudukottai




