ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்காரில் கனமழை சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பஸ்தர், தம்தரி, பிலஸ்பூர், தர்க், ராய்ப்பூர், நாராயண்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் சாலை போக்குவரத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/chhattisgarh-heavy-rain-floods-thousands-affected




