பெங்களூரு, 6 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது குளோபல் செஸ் லீக் (ஜி.சி.எல்.) போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையிலான அலாஸ்கன் நைட்ஸ் அணி 6-11 என்ற கணக்கில் திரிேவணி கான்டினென்டல் கிங்சிடம் தோல்வியை தழுவியது. நைட்ஸ் அணியில் அர்ஜூன் எரிகைசி, யாஜிஸ் கான், நினோ பேட்சி யாஷிவிலி ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டனர். ஆனந்த்- அலிரெஜா இடையிலான ஆட்டம் 59-வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல் சென் தலைமையிலான நடப்பு சாம்பியன் அல்பின் ஏ.பி.எல். பைபர்ஸ் அணி 15-3 என்ற கணக்கில் அமெரிக்கன் கேம்பிட்சை வீழ்த்தி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/global-chess-viswanathan-anands-team-defeated




