சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அலுவலகத்தை, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி, நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது. அதன்படி, 10-வது தளத்தில் பிளாக் 1-க்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி, பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. மேலும், பணியை 3 மாதங்களில் முடிக்கவும், பொதுப்பணித்துறையில் பதிவு பெற்ற தகுதியான ஒப்பந்தக்காரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. நாமக்கள் கவிஞர் மாளிகை மூன்று கட்டமைப்பு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த டெண்டர் போட்டியில் 5 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தொழில்நுட்பத் தகுதி பூர்த்தி செய்யாததால் ‘யுடெக் இன்ஜினியரிங்’ நிறுவனம் ஆரம்பத்திலேயே தகுதியிழப்பு செய்யப்பட்டது. ராசி பில்டர்ஸ் (சென்னை), ஈஸ்வரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (மதுரை), ஸ்ரீ ராகவேந்திரா பில்டர்ஸ், எம் கியூப் இன்ஃப்ரா (சென்னை) ஆகிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றான. இந்த நிலையில், செயலக அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணியை சென்னையைச் சேர்ந்த ‘ராசி பில்டர்ஸ்’ (Raasi Builders) நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொதுப்பணித்துறை (PWD) நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகையை விட 32 சதவீதம் குறைவாகக் அதாவது ரூ.3.78 கோடி குறிப்பிட்டு, குறைந்த தொகை கோரிய ‘L1’ நிறுவனமாக ராசி பில்டர்ஸ் தேர்வாகியுள்ளது. Ajith: ``முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி" - வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/the-rasi-builders-has-secured-the-tender-for-renovating-the-cms-new-secretariat-office



