தூத்துக்குடி, தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலக உதவியாளர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆதிதிராவிட நலத்துறை அலுவலக உதவியாளர் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவர் கோவில்பட்டியில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு பரம்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். கோவில்பட்டிக்கு பைக்கில் பயணம் இவரது மனைவி பழனியம்மாள், எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு வீரஆனந்தராஜ், வீரமுத்து ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், முருகன் நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தபால்களைப் பெற்றுக்கொண்டு தனது பைக்கில் தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் கோவில்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பைக் மீது லாரி மோதி விபத்து அவரது பைக் எப்போதும்வென்றான் அருகே உள்ள பசுவந்தனை விலக்கில் சென்றபோது, எதிர் திசையில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயமடைந்தார். அரசு அலுவலர் உயிரிழப்பு இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்குப்பதிவு இந்த சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்(39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் வடக்கு பரம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/thoothukudi-accident-involving-a-lorry-hitting-a-bike-government-official-dies




