புதுடெல்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் உரிமைகள், தமிழ்நாட்டின் குரல் இனி நாடாளுமன்றத்தில் இன்னும் வலிமையாக ஒலிக்கும். ஆலோசனை கூட்டம் இன்று தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப. சிதம்பரம், புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. வைத்திலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கார்த்தி ப. சிதம்பரம், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில், சுதா ஆர்., விஜய் வசந்த் கிறிஸ்டோபர் திலக் மற்றும் நானும் கலந்து கொண்டோம். ஒருங்கிணைந்த குரல் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளில், கட்சி வேறுபாடுகளை கடந்து, ஒருங்கிணைந்த குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவது குறித்தும், வருங்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். தமிழ்நாட்டின் உரிமை காவிரி நீர் உரிமை, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை மற்றும் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து, அடுத்தகட்ட செயல்திட்டங்களை வகுத்துள்ளோம். ஒருங்கிணைப்பு இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழ்நாட்டின் உரிமைகள், தமிழ்நாட்டு மக்களின் நலன், மற்றும் மாநிலத்தின் குரல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலிமையாக ஒலிக்க, இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுப்பெறும். ஒன்றுபட்ட குரல். உறுதியான செயல். தமிழ்நாட்டின் நலனே எங்கள் முன்னுரிமை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,விசிக,இயூமுலீ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28.7.2026 மாலை 4.30 மணியளவில் அறை 62 இல் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது — Manickam Tagore.Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) July 28, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tamil-nadus-rights-and-voice-to-grow-stronger-in-parliament-manickam-thakur




