டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் மாணவர்களின் முழக்கமும், செயல்பாடுகளும் வாந்தி வரும் உணர்வை ஏற்படுத்தியதாக இமாச்சலப் பிரதேசத்தின் பா.ஜ.க எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, ``டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். போராட்டக்காரர்கள் 75 வயதான பிரதமர் மோடியைக் குறிவைத்தனர். மறைந்த அவரின் தாயாரை இழிவாகப் பேசினார்கள். நானும் மாணவர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இவர்கள் எப்படி மாணவர்கள்? அவர்களைப் பார்த்தால் மாணாவர்கள் போலத் தெரியவில்லை. எத்தகைய அநாகரிகமான மொழியைப் பயன்படுத்துகிறார்கள்? இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் பார்ப்பதற்கு மாணவர்கள் போலவே இல்லை. டெல்லி போராட்டம் நான் 16-வது வயதிலேயே நிதி ரீதியாக சுதந்திரமானவளாக இருந்தேன். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோரை நிதி ரீதியாகச் சார்ந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களோ அல்லது சட்ட ஆலோசனையோ தேவைப்பட்டால், அதைச் சமாளிக்கும் வசதி இவர்களின் பெற்றோருக்கு இருக்குமா? இவர்களுக்கோ அதற்கான வசதி இல்லை. நான் ஒருபோதும் எங்கள் பெற்றோருக்குச் சுமையாக இருந்ததில்லை. போராட்டக்காரர்களின் காணொளிகளைப் பார்த்து வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது. Gen Z தலைமுறையினரை "Generation Gutter" (சாக்கடைத் தலைமுறை). என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அருவருப்பான விஷயங்களை நான் பார்த்ததில்லை. மேற்கத்திய பாணியைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியப் பெண்களின் புதிய தலைமுறை இது. இவர்களை நான் 'சாக்கடைத் தலைமுறை' என்று அழைக்கிறேன். இவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. அதே நேரத்தில் குடும்பத்தைப் பராமரிக்கும் இல்லத்தரசிகளாக வாழ முடியாத அளவிற்கு மோசமானவர்களாகவும் இருக்கிறார்கள். போதைப் பொருட்கள், மது அருந்துதல் அல்லது பலருடன் தொடர்பில் உறவில் இருப்பதைச் சுதந்திரமாகப் பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோரின் சம்பாத்தியத்தில் வெட்கமின்றி வாழ்கிறார்கள்." எனக் கடுமையாக தெரிவித்திருந்தார். கங்கனா ரனாவத் கங்கனாவின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் பாய் ஜகதாப், "ஒரு பெண்ணாக இருந்துகொண்டும், போராட்டத்தின் போது மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தவறாக நடத்தப்பட்டதற்காக கங்கனாவுக்கு எந்த மனவருத்தமும் இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். AIMIM கட்சியின் தலைவர் வாரிஸ் பதான், ``கங்கனாவின் பேச்சு 'கடும் கண்டனத்திற்குரியது. அவர் இந்த தலைமுறை இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக எம்.பி பயன்படுத்திய இந்த மொழியை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும்."எனத் தெரிவித்திருக்கிறார். ''டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்" - ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/kangana-ranaut-has-made-controversial-remarks-regarding-student-protests




