தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுப்பாடு- சவேரியார் புரத்தைச் சேர்ந்தவர் மரிய மிக்கேல். இவர் மனைவி சபிதா ரோனிகம். இவர்களுக்கு 9-ம் வகுப்பு பயின்று வந்த மரிய நிரோஷா என்ற மகளும், 7-ம் வகுப்பு படித்து வந்த மரிய கெனிஸ்டன் என்ற மகனும் இருந்தனர். மரிய மிக்கேல் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மரிய மிக்கேலின் மனைவி சபிதா ரோனிகம், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டுச் சென்றுள்ளார். புதுக்கோட்டை இதன் காரணமாக மரிய மிக்கேல் மனம் உடைந்து காணப்பட்டு இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிரைவர் வேலைக்குச் செல்லாமல் பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற மன வேதனையில் இருந்த மரிய மிக்கேல், நேற்று இரவு தற்கொலை செய்யும் முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு குழந்தைகளுக்கு சிக்கன் ரைஸ் உள்ளிட்ட உணவுகளை வாங்கி வந்து கொடுத்துள்ளார். பின்னர், குழந்தைகள் இருவரும் நன்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது மரிய மிக்கேல் மின்சார வயரை தனது இரண்டு குழந்தைகளின் கை, கால்களில் கட்டி, தனது உடலிலும் கட்டிக் கொண்டு, மின்சாரத்தைப் பாய்த்து துடிதுடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணி வரை பூட்டப்பட்ட கதவு திறக்கப்படவில்லை. குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை காவல் நிலையம் போலீஸார் பூட்டப்பட்ட கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே மரிய மிக்கேல் மற்றும் 2 குழந்தைகள் ஆகியோர் கட்டிலில் படுத்திருந்தனர். மூன்று பேரின் உடலிலும் மின்சார வயர்கள் உடலில் கட்டியபடி வாயிலிருந்து ரத்தம் மற்றும் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மின்சார வயர்களில் மின்சார இணைப்பும் இருந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/horrific-incident-where-a-father-electrocuted-his-two-children-and-then-committed-suicide




