டெல்லி, அமெரிக்காவைச் சேர்ந்த கைதி வாண்டைக்கின் வழக்கு விசாரனையை டெல்லி கோர்ட்tu ஒத்தி வைத்தது. அமெரிக்கர் கைது அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் மேத்யூ வான்டைக். இவர் மியான்மரில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்கள், ட்ரோன்கள் வழங்கி பயிற்சி அளித்ததார். இதையடுத்து மேத்யூ வான்டைக் இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். உணவு பிரச்சனை சிறை உணவு காரமாகவும், எண்ணெய் நிறைந்ததாகவும் இருப்பதால், அவரால் சாப்பிட முடியவில்லை. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அவர் சோயா பால் போன்ற திரவ உணவுகளை மட்டுமே அருந்தி வருகிறார். இதனால் அவர் 13 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளது என டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் முறையிட்டார். வழக்கு ஒத்தி வைப்பு மேலும் தனது சொந்த செலவில் கோழி, மீன், பாஸ்தா, ஆலிவ் ஆயில் போன்ற பொருட்களைக் கொண்டு தனக்கான உணவை தானே சமைக்க அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட், திகார் சிறை நிர்வாகத்திடம் இது குறித்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/delhi-court-adjourns-case-of-american-prisoner




