ஈரோடு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நீலகிரியில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து 54 அடிக்கு வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 3,405 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இது நேற்று மதியம் 2 மணியளவில் வினாடிக்கு 5,327 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 1-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 54.98 அடியாக இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் 58.18 அடியாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 8 நாட்களில் 3 அடிக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rain-in-the-catchment-area-water-inflow-to-bhavanisagar-dam-has-increased




