நெல்லை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரே குடும்பத்தில் ஒரே நேரத்தில் 3 சகோதரர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வாகியிருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு நெல்லை மாவட்டம், வெள்ளாங்குளியைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் வெங்கட்ஸ்ரீ, அருண் மற்றும் தருண் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று நீட் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியிருப்பது நம் மாவட்டத்திற்கும், தமிழக மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது. நீட் தேர்வு திருநெல்வேலி மாவட்டம், வெள்ளாங்குளி என்னும் சிறு கிராமத்தில், நெசவுத் தொழில் செய்து வரும் எளிய குடும்பத்திலிருந்து வந்த இந்த மூன்று சகோதரர்களும் தங்களின் எம்.பி.பி.எஸ். என்ற மிகப்பெரிய கனவை நிறைவேற்ற நீட் தேர்வு உதவி உள்ளது என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. பாராட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்தவுடன், அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மூன்று சகோதரர்களையும், அவர்களது பெற்றோரையும் சந்தித்து எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/one-family-3-brothers-at-the-same-time-exam-to-study-mbbs-nainar-nagendran-praises




