புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார். அன்றைய தினம் அவருடன் இரண்டு அமைச்சர்களும், ஜூன் 17-ம் தேதி மூன்று அமைச்சர்களும் பதவியேற்றனர். ஆனால் அவர்களுக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அமைதியாக இருந்த முதல்வர் ரங்கசாமியை காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதையடுத்து கடந்த ஜூலை 20-ம் தேதி ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலை அளித்தார். வழக்கமாக ஆளுநரிடம் வழங்கப்படும் இலாகாப் பட்டியல் ஒரு மணி நேரத்தில் வெளியாகிவிடும். அமைச்சர்களுடன் அளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆனால் தற்போது பத்து நாட்களைக் கடந்தும், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 27-ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமியிடம், `ஆளுநரிடம் அமைச்சர்களுக்கான பட்டியல் கொடுத்தும் ஏன் இன்னும் இலாகாக்கள் அறிவிக்கப்படவில்லை?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``எனக்குத் தெரியவில்லையே…" என்று பதிலளித்துவிட்டுக் கடந்தார். அப்போது, ``யாரை எந்த நேரத்தில் கணக்குத் தீர்க்க வேண்டுமோ, அந்த நேரத்தில் தீர்ப்போம்" என்று அவர் பேசிய வார்த்தைகள், ஆளுநருடனான மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் குறுக்கிட்டதால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்தபிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு, மத்திய அரசிடம் ரூ.14,300/- கோடிக்கு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் முடிவு வெளியாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. அதேபோல சட்டப்பேரவையை நடத்தும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தலையும் நடத்தவில்லை. அமைச்சர் நமச்சிவாயம் இலாகாக்கள் இல்லை என்று அமைச்சர்கள் வராததால் வெறிச்சோடிக் கிடந்தது சட்டப்பேரவை வளாகம். ஆகஸ்ட் மாதத்துடன் அரசின் செலவினங்களுக்கு பெறப்பட்ட ஒப்புதல் முடிவடைகிறது. அதனால் இந்த மாதத்தில் சட்டப்பேரவையைக் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்து, அரசின் செலவினங்களுக்கு ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் யாரென்று தெரியாமல், மொத்தமாக முடங்கியது புதுச்சேரி நிர்வாகம். முதல்வர் ரங்கசாமி தலைமையிலான கடந்த அமைச்சரவையில், உள்துறை அமைச்சராக இருந்தவர் பா.ஜ.கவைச் சேர்ந்த நமச்சிவாயம். அதேபோல இந்த ஆட்சியிலும் அவருக்கு உள்துறையைக் கேட்டு அடம்பிடித்தது பா.ஜ.க. அத்துடன் சபாநாயகர் பதவியும் தங்களுக்குத்தான் வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் உள்துறையை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கொடுப்பதற்கு, சபாநாயகர் பதவியை பா.ஜ.க-வுக்கு தருவதற்கும் விருப்பமில்லை. இந்தச் சூழலில்தான் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்த ரங்கசாமி, அமைச்சர்களுக்கான இலாகாக்கள் பட்டியலை அளித்தார். ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காததால், அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு தாமதமானது. அதையடுத்து புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் விருதை வழங்குவதற்காக ஆகஸ்ட் 8-ம் தேதி வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அதற்குள் எப்படியாவது இலாகாக்களை ஒதுக்கீடு செய்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிக்கு `அழுத்தம்' கொடுக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் கைலாஷ்நாதன் அதனடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட பட்டியலை நேற்று மாலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் கொடுத்தார் முதல்வர் ரங்கசாமி. அதற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளித்ததால், நேற்று இரவே அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் அரசிதழில் வெளியாயின. அதில் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்திருக்கிறது. பெண் எம்.எல்.ஏ-க்களே இல்லாத புதுச்சேரி சட்டசபை; நியமன எம்.எல்.ஏ-க்கள் மூலம் சரிசெய்யுமா மத்திய அரசு? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/puducherry-ministyry-conflict-comes-to-an-end




