தாராபுரம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் பானுமதி நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அக்கட்சியின் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பாளர் பானுமதியை அறிமுகம் செய்து வைத்து அவருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார். முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "சினிமா மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதித்த நான் அரசாங்க பணத்தைத் தொட மாட்டேன் எனச் சொன்னவர் விஜய். ஆனால், இன்றைக்கு அரசாங்க பணத்தில் லண்டன் சென்று அஜித் அவர்களின் கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். நட்பின் அடிப்படையில் இந்தக் கார் பந்தயத்தை விஜய் அவர்கள் தொடங்கி வைக்கவில்லை. தனக்கு போட்டியாக அஜித் வந்துவிடக்கூடாது என்பதுதான் இவரின் ஒரே நோக்கம். தொண்டர்கள் மற்றும் மக்கள் செல்வாக்குடன் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித். திண்டுக்கல் சீனிவாசன் அவர் அரசியலில் இறங்கினால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என்ற பயத்தில் அவரை நண்பராக நடித்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார். இந்த நட்பின் மூலம் அஜித் தனக்கு அரசியலில் போட்டியாக வர மாட்டார் என்பதுதான் இவரின் வியூகம். அதுதான் உண்மை. அதற்கு நம்முடைய வரிப்பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். விலைவாசி உயர்வு உச்சத்தில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மோசமாக இருக்கின்றன. ஆனால், இவை அனைத்தையும் மறந்து விட்டு லண்டன் சென்றிருக்கிறார் முதல்வர். உடன் வந்த 100 நூறு பேருக்கும் அரசாங்க பணத்தில் டிக்கெட் போட்டு அழைத்துச் சென்றிருக்கிறார். சென்னையில் செய்ய வேண்டிய வேலைக்காக லண்டன் சென்றிருக்கிறார்" என்றார். '48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/election/dindigul-sreenivasan-speech-about-cm-joseph-vijay-london-visit-controversy




