தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினின் பாதுகாப்பு Z+ பிரிவிலிருந்து Z ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. Z+ பிரிவின் கீழ், குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பிற்காகச் சுழற்சி முறையில் கிட்டத்தட்ட 50 கமாண்டோக்கள் மற்றும் சிறப்புப் பிரிவு போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன், குண்டுதுளைக்காத வாகனம் மற்றும் சிக்னல் ஜாமர் வசதியும் வழங்கப்படும். இந்தப் பாதுகாப்புதான் ஸ்டாலினுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. ஸ்டாலின் - திமுக அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்? இப்போது வழங்கப்பட்டிருக்கும் Z பிரிவு பாதுகாப்பின் கீழ், ஸ்டாலினுக்கு 22 காவலர்கள் வரை பணியில் இருப்பார்கள். ஏன் இந்த முடிவு? மத்திய, மாநில உளவுத்துறைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அந்த ஆய்வின் தற்போதைய அறிக்கையின்படிதான், ஸ்டாலினுக்கு Z+ பிரிவு பாதுகாப்பிலிருந்து Z பிரிவு பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு மாற்றம் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/m-k-stalin-security-cover-downgraded-from-z-to-z




