1. இனிப்பு (கல்கண்டு): இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத் துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு, வெல்லம் போன்ற இனிப்புப் பொருள்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக் கும். ஆகவே, வீட்டில் ஏதேனும் ஒரு இனிப்புப் பொருளேனும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் வாழ்க்கை இனிக்கும் படி மகாலட்சுமிதேவி அருள்புரிவாள். 2. மஞ்சள். குங்குமம் மங்கலத்தின் அடையாளம். வீட்டுப் பூஜையறையில் மஞ்சள் கொண்டு பிள்ளையார் சுழி போட்டு வைப்பது விசேஷம். வீட்டுக்கு விருந்தினராக வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள்-குங்குமத்தைத் தாம்பூலத்துடன் அளிப்பதால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். 3. கல் உப்பு: பாற்கடலில் பிறந்தவள் மகாலட்சுமி. உப்பும் கடலிலிருந்து கிடைப்பது. ஆகவே, உப்பு மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாகப் போற்றப்படுகிறது. வீட்டில் எப்போதும் கல் உப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 4. பஞ்சலட்சுமி அடையாளங்கள் என்று ஐந்து விஷயங்களை எடுத்துச்சொல்கின்றன ஞானநூல்கள். அவை: தேன், நாணயங்கள், பால், தாமரை, தானியக் கதிர். இவற்றில் நாணயங்களை லட்சுமியா கவே பாவித்து வணங்குதல் நலம். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடைகள், போட்டிகள் எல்லாம் நீங்கி லாபம் கிட்டும். வில்வம் 5. வில்வம் இலை: வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக் கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். 6. தாமரை: வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படிச் செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை. 7. கஜலட்சுமி: யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாகப் போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அந்த இடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்பது நம்பிக்கை. ஆகவே வீட்டில் கஜலட்சுமி படம் வைத்து பூஜிப்பது நல்லது. அதேபோல் நிலைப்படிகளில் மரவேலைப்பாடாக கஜலட்சுமி வடிவைப் பதிக்கலாம். 8. அஷ்ட மங்கலப் பேழை வீட்டில் இருப்பது விசேஷம் என்பார்கள். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்திட வேண்டுமெனில் எண்வகை மங்கலப் பொருள்களைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்துத் தினமும் வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஞான நூல்கள், அந்தப் பொருள்களையும் பட்டியலிடுகின்றன. அவை: குங்குமச் சிமிழ், சந்தனம், தாம்பூலம், கொட்டைப்பாக்கு, சங்கு, கண்ணாடி, காமாட்சி விளக்கு, தாமரை. இவை வீட்டில் இருந்தாலும் பெண்களால் வழிபடப்பட்டாலும் அதனால் மகாலட்சுமி ஈர்க்கப்படுவாள் என்கிறது அறப்பளீச சதகம். பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, பூர நட்சத்திரம், அஷ்டமி திதி ஆகிய நாள்களில் அஷ்ட மங்கலங்களை வைத்துப் பூஜை செய்து வந்தால் இல்லத்தில் வறுமை நெருங்காது, தன வரவுக்குக் குறை இருக்காது. 9. செல்வம் தரும் பதிகம்: சகலவிதமான ஐஸ்வர்யங்களுக்கும் ஈசனே அதிபதி என்று சிறப்பிக்கும் விதமாக, புராண நூல்கள் அவரை `ஐஸ்வர்ய ஈஸ்வரர்’ எனப் போற்றுகின்றன. குபேரனுக்கு நவநிதிகளும் அருளிய அந்த ஈசனைப் பதிகம் பாடி வழிபடுவது விசேஷம். குறிப்பாக. ‘செல்வம்’ என்ற சொல் 7 முறை வரும்படி திருஞானசம்பந்தர் அருளிய - கீழ்க்காணும் பாடலை தினமும் பாடி, சிவனாரை வழிபட்டு வந்தால் பொன் - பொருள் மட்டுமின்றி சகல செல்வங்களும் ஸித்திக்கும். செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/spiritual/gods/9-simple-methods-prescribed-by-shastras-to-increase-wealth-at-home




