சென்னை, தங்கம் விலை கடந்த 27-ந்தேதி வரை உயர்ந்து வந்து, 28, 29-ந்தேதிகளில் குறைந்து காணப்பட்டது. நேற்று முன் தினம், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தங்கம் விலை இன்றைய நிலவரப்படி, விடுமுறை தினமான நேற்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் ஒரு கிராம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை சென்னையில் வெள்ளி விலை 6-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/soaring-gold-prices-what-is-the-situation-today




