மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில், 50 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் மீண்டும் சைக்கிளில் ரோந்து பணியை தொடங்கியுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலை சுற்றியுள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 4 சித்திரை வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். வாகனங்கள் செல்ல தடை இங்குள்ள சித்திரை வீதிகளுக்குள் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை தீவிரமாக கண்காணிக்கவும், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கவும் காவல் துறை சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைக்கிள் ரோந்து இதன் ஒரு பகுதியாக, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த சைக்கிள் ரோந்து முறையை போலீசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதற்காக முதற்கட்டமாக 5-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரவேற்பு சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு இல்லாத வகையில் அறிவுரைகளை வழங்கி வரும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/after-50-years-police-cycle-patrol-around-madurai-meenakshi-amman-temple




