சென்னை, மத்திய பா.ஜனதா அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற ஆலோசித்து வருகிறது. இதனால் தென்மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து உரிய முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சாய்குமார் தனித்தனியாக கடிதம் அனுப்பியிருந்தார். இந்த கூட்டத்தை திமுக, அதிமுக புறக்கணித்துள்ளது. பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியும் புறக்கணித்துள்ளது. யார் யார் பங்கேற்பு காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர்,விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, விஜய் வசந்த், பிரவீன் சக்கரவர்த்தி,ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் மற்றும் அக்கட்சி எம்பி ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பி நவாஸ் கனி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா இரண்டு எம்பிக்கள், மதிமுக எம்பி துரை வைகோ ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மொத்தம் 57 பேர் உள்ள நிலையில், 19 எம்.பிக்கள் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். 37 எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்து உள்ளனர். காங்கிரஸ் எம்பி சுதா இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/constituency-delimitation-vijay-consults-with-mps-who-participated




