சென்னை, 8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தது. லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. மதுரை பாந்தர்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் திருச்சிக்கு எதிரான முதலாவது தகுதி சுற்று மழையால் ரத்தானதால் புள்ளி பட்டியல் முன்னிலை அடிப்படையில் மதுரை அணி 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று மழையால் கைவிடப்பட்டதால் கோவை அணி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. 2-வது தகுதி சுற்றில் கோவை அணி 84 ரன் வித்தியாசத்தில் திருச்சியை துவம்சம் செய்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. பேட்டிங் தேர்வு இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-final-kovai-team-wins-toss-against-madurai-and-elects-to-bat




