விஜய் டிவியில் செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் நடந்ததில்லை. கொஞ்சம் முன்னோ பின்னோ நடக்கும். ஆனால் இந்த வருடம் இந்த எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே நேரத்தில் நடத்துவதென தீர்மானித்திருக்கிறார்கள். அதேபோல் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்து சிலரை அனுப்பலாமெனத் தீர்மானித்து 'பிக்பாஸ் தி காமன் மேன்' என்றொரு நிகழ்ச்சியையும் நடத்தி அதில் தேர்வாகும் ஓரிருவரை பிக்பாஸ் போட்டியாளராக அனுப்புவதென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த சீசனில் போட்டியாளர்களாக செல்கிறவர்களென சிலரது பெயர்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். தற்போது மேலும் சிலர் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. யார் யார் எனப் பார்க்கலாமா? ஷபானா - ஆர்யன் தனி ஆளா ஜோடியா? 'செம்பருத்தி' சீரியலில் நடித்த சபானா மற்றும் அவரது கணவர் ஆர்யன் இருவரது பெயர்களூமே அடிபடுகின்றன. ஜோடியாகச் செல்வதில் இரண்டு பேருக்குமே தயக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே யாராவது ஒருவர் இதில் உறுதியாகச் செல்லலாமென எதிர்பார்க்கப் படுகிறது. ஆர்யனுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஈரமான ரோஜாவே | Eeramana Rojave அப்போ ஹீரோயின் இப்ப ஹீரோ! ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த வினோத் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறூகிறார்கள். இந்த தொடரில் வினோத்துக்கு ஜோடியாக நடித்த பவித்ரா பிக்பாஸ் எட்டாவது சீசனில் ஒரு போட்டியாளராகச் சென்றது நினைவிருக்கலாம். Madhampatty Rangaraj - Joy Crizdildaa சோஷியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாகவே ட்ரெண்டிங்கில் இருந்தவர் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா. தன் குழந்தைக்கு அப்பா ரங்கராஜ்தான் என நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்ட ஜாய் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லவிருப்பதாக நம்பிக்கையான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர இன்ஸ்டாகிராமில் பிரலபலமான மேக் ஓவர் ஆர்ட்டிஸ்ட் அஸ்மிதாவும் பிக்பாஸ் செல்லத் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. மேக் - அப் ஏரியாவிலிருந்து இன்னொரு போட்டியாளரும் கலந்து கொள்ளலாமென்கிறார்கள். இவர்கள் தவிர்த்து முன்னரே சொன்ன முன்னாள் கிரிக்கெட்டர் முரளி விஜய்-யும் செல்கிறார் என்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/television/news-about-some-expected-contestants-of-biggboss-tamil-10




