சென்னை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தேசத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்று, கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் சேவையை தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எளிய மக்களின் நலன், விவசாயிகளின் முன்னேற்றம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இளைஞர்களுக்கான வாய்ப்புகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பிரதமர் தேசத்தை வழிநடத்தி வருகிறார். அரசுத் தலைமைப் பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்யும் 25 ஆண்டுகாலப் பயணத்தை முன்னிறுத்தி, அவரது சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் நடைபெறும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ மேலும் சிறப்பான மக்கள் பங்கேற்புடன் வெற்றி பெறட்டும். சேவை தினமான இன்று, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, ஒவ்வொருவரும் ஒரு தீபம் ஏற்றி, 140 கோடி மக்களுடன் இணைந்து, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டின் முதன்மை சேவகரான பிரதமர் நரேந்திர மோடி இதே சேவை உணர்வுடன் தொடர்ந்து பயணிக்க இறைவனை வேண்டுவோம். தேச சேவைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து தேசப் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-pray-prime-minister-modi-dedicated-to-national-service-lives-in-good-health




