மதுரை எழுமலையைச் சேர்ந்த கீதாலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழுவா னது, அரசியல் கட்சிகளுடன் அதிகம் தொடர்பு கொண்ட நபர்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிதிகளுக்கு முரணானது. அறங்காவலர்களின் நியமனம், அரசியல் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் இருக்கக்கூடாது என ஏற்கனவே ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதில் பல வழிகாட்டு தல்களையும் வழங்கி இருக்கிறது.அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலின் அறங்காவலர் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசியல் தலையீடு இன்றி வெளிப்படையாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழு பதவிக்காலத்தை நீட்டித்ததை எந்த தரப்பினரும் எதிர்க்கவில்லை. அவர்களின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் முடிகிறது. அதன்பின்புதான் புதிய அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடரவில்லை. அரசியல் சார்பற்றவர்களை வெளிப்படை தன்மையோடு நியமிக்குமாறு கோரியிருக்கிறார்.ஆனால் இப்போதைக்கு அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிய வில்லை. எனவே இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. எனவே இந்த மனுவை தற்போது விசாரிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/case-regarding-meenakshi-amman-temple-trustees-dismissed




